செவிலியர்களின் வசதிக்காக, தரத்தை மேம்படுத்தி, செவிலியப் பணிகளுக்கு ஏற்றவாறு சீருடைகளில் மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்பேரில், மருத்துவம் - ஊரக நலப்பணிகள் இயக்குநர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. முதல்நிலை செவிலிய கண்காணிப்பாளர்கள், 2ம் நிலை செவிலிய கண்காணிப்பாளர்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்கள், 10 ஆண்டுகளுக்கு கீழ் பணியாற்றுபவர்கள், பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் என ஆண், பெண் செவிலியர்களுக்கு பிரத்யேக வண்ணங்களுடன் தனித்தனியே சீருடைகள் வடிவமைக்கப்பட்டன. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிக செவிலியர்கள் 26 ஆயிரத்து 464 பேர் பயனடைவார்கள். இந்த சீருடைகளை சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிமுகப்படுத்தினார்.
அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment