அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - Agnipuratchi

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்

Share This

ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஒருநாள் பகுதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவர்கள், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் 25க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள், மருத்துவமனை வளாகத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனர். இதனால், ஏராளமான புறநோயாளிகள் சிகிச்சை எடுக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். அதேபோல், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும், மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஏராளமான புற நோயாளிகள், மருத்துவமனை வளாகத்திலேயே பல மணி நேரம் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages