அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து ஜெயலலிதா மரணத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொணடு வர வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதியாகி உள்ளது. சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கவிடாமலும், ஆஞ்சியோகிராம் செய்யவிடாமலும் தடுத்தது யார்⁉ என்பதை ஆணையம் விவசாரிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அவரை பார்க்க எங்களை யாரும் அனுமதிக்கவில்லை. மருத்துவமனையை உல்லாசவிடுதியாக்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் தான். சசிகலாவை தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்" என்று கூறினார். மேலும், ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதி-சி.வி.சண்முகம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment