புத்தாண்டு கொண்டாட்டம்-15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு - Agnipuratchi

புத்தாண்டு கொண்டாட்டம்-15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு

Share This

புத்தாண்டை ஒட்டி சென்னையில் மட்டும் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். அதன்படி, 31ஆம் தேதி இரவு 9மணி முதல் சென்னையில் 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்படவுள்ளது. இரவில் மட்டும் 2 மணி வரை ஒரு ஷிப்டிலும், அதிகாலை விபத்துக்களைத் தடுக்க 2 மணிக்கு மேல் ஒரு ஷிப்டிலும் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். சிறு சிறு விபத்துக்கள் நடந்தாலும் உயிரிழப்புக்கள் நடைபெறாமலிருக்க இழப்பில்லா புத்தாண்டு என்ற இலக்கோடு செயல்படப் போவதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டும் அல்லாமல் குற்ற ஆவண காப்பத்தில் குற்றம் செய்தவரின் தகவல்கள் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடு செல்வதற்கான தடையில்லா சான்றிதல் பெறுவதிலும் சிரமம் ஏற்படும் என்றும் சென்னை மாநகர காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages