திருவள்ளூரை அடுத்த காக்களூர் அருகே திருமுருகநாதன் (52). இவருடைய மனைவி பானுமதி (50). இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி (26), தேவிபிரியா (19) என 2 மகள்கள் உள்ளனர். தேவிபிரியா, இந்து கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேவிபிரியாவுக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த விவேக் என்பவருக்கும் இடையே முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. இதையறிந்த தேவிபிரியாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளார்கள். இந்நிலையில், விவேக் தற்போது மைசூரில் உள்ள நிலையில், தேவிபிரியாவை அவர் கேட்டுக்கொண்டதையடுத்து வீட்டில் இருந்து கூட்டிட்டு வர தனது இரு நண்பர்களை அனுப்பி வைத்துள்ளார். அவர்களை வீட்டின் வெளியே நிற்குமாறு கூறிவிட்டு, தேவிப்பிரியா மட்டும் வீட்டுக்குள் சென்று தனது உடமைகளை எடுக்க, அதனை அவரது தாயார் பானுமதி பார்த்து தடுக்க முற்பட்டுள்ளார் . இதில், ஆத்திரமடைந்த தேவிப்பிரியா, காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து, வீட்டில் காய்கறி வெட்ட வைத்து இருந்த கத்தியை எடுத்து வந்து, பானுமதியின் வயிறு, கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதனை கண்ட சாமுண்டீஸ்வரி கூச்சலிட, மூவரும் தப்பி ஓடினர். இதையடுத்து தப்பியோடிய மூவரையும் அக்கம்பக்கத்தினர் பிடித்து சரமாரியாக தாக்கி திருவள்ளூர் தாலுகா போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காதலன் விவேக்கையும் தனிப்படை அமைத்து போலீசார் சென்று தேடி வருகின்றனர். பிறகு, ரத்த வெள்ளத்தில் இருந்த பானுமதியை மீட்டு அரசு திருவள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பானுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
பேஸ்புக் காதலுனுக்காக தாயை கொன்ற மகள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment