2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திலுள்ள பாஜக தொண்டர்களுடன் நமோ ஆப் மூலம் முதற்கட்டமாக சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து தொகுதியில் கலந்துரையாடினார். அதன்பின் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடினார். விழுப்புரத்தில் கூடியிருந்த கூட்டத்தில், நிர்மல் குமார் ஜெயன் என்பவர், மத்திய வர்க்கத்தினரிடம் வரி வசூல் செய்வதில் மட்டுமே அக்கறை காட்டுவது ஏன்⁉என்ற ரீதியில் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் 'நன்றி நிர்மல்ஜி' என்று கூறிவிட்டு விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி தொண்டர்கள் அழைப்புக்குச் சென்றுவிட்டார். சமூக வலைதளங்களில் இது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "சிரம்மப்படும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மோடி கூறும் பதில் 'வணக்கம் புதுச்சேரி'. மோடி இதுவரை செய்தியாளர்களை சந்திக்காததைக்கூட விடுங்கள். அவரால் கட்சித் தொண்டர்களது கேள்விக்கே பதிலளிக்க முடியவில்லை. முன்கூட்டியே திட்டமிட்டபடி கேள்விகள் கேட்பது நல்ல திட்டம் தான், அதேபோல் முன்கூட்டியே திட்டமிட்ட பதில்களையும் தயார் செய்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
வீடியோ கான்பிரன்ஸில் தொண்டர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற மோடி குறித்து ராகுல் காந்தி
வீடியோ கான்பிரன்ஸில் தொண்டர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற மோடி குறித்து ராகுல் காந்தி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment