ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் -ஸ்டாலின் பேச்சு - Agnipuratchi

ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் -ஸ்டாலின் பேச்சு

Share This

முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு விழாவைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவா் ஸ்டாலின் பேசுகையில் பிரதமா் நரேந்திர மோடி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக நடந்துகொள்வதற்கு பதிலாக தன்னை ஒரு மன்னராக கருதி செயல்பட்டு வருகிறாா். மோடியின் தலைமையில் செயல்படும் இந்திய அரசு மேலும் 5 ஆண்டு காலம் நீடித்தால் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும். கஜா புயல்:tornado: பாதிப்பிற்கு பிறகும் பிரதமர் மக்களுக்கு நேரில் சென்று இன்னமும் ஆறுதல் கூறவில்லை. இதே போன்ற ஒரு நிலை குஜராத்திற்கோ பிற மாநிலங்களுக்கோ ஏற்பட்டிருந்தால் இப்படி தான் நடந்துகொண்டு இருப்பாரா தமிழகம் என்பதால் தான் நீங்கள் கண்டுகொள்ளவில்லையா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம். ராகுல் காந்தியே வருக. நல்ஆட்சி தருக. நாட்டை காப்பாற்ற ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். ராகுலின் கரத்தை பிற கட்சியினரும் வலுப்படுத்த வேண்டும். மேடையில் அமா்ந்துள்ள அனைவரும் ராகுலை பிரதமா் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages