ஸ்டர்லைட் விவகாரம்-வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் - Agnipuratchi

ஸ்டர்லைட் விவகாரம்-வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

Share This

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசின் உத்தரவை தருண் அகர்வாலா குழுவினர் அளித்த பரிந்துரையின் பேரில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து, அடுத்த 3 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் செலவில், தூத்துக்குடியில் நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. மேலும், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிய அனுமதி ஆணையை வழங்க வேண்டும் என்றும், துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை உடனே கொடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல், எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கூறி, வேதாந்தா நிறுவனம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages