ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Agnipuratchi

ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Share This

இந்திய ராணுவத்திற்கு தேவையான அதிநவீன போா் விமானங்களான ரபேல் போா் விமானங்களை டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணை இன்று நடந்தது. அப்போது வழக்கு தொடா்பான அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமா்வு வழங்கிய தீா்ப்பில், "ரபேல் விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு சரியானதே. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவதற்கான அதிகாரம் கிடையாது. உரிய வழிமுறைகளை பின்பற்றிய பின்னரே ரபேல் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டது. மேலும், "ரபேல் ஒப்பந்தம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது" என்று தொிவித்த நீதிபதிகள் இது குறித்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages