பாடம் நடத்த ஏதுவாக ஆசிரியர்களுக்கும் மடி கணினி-அமைச்சர் செங்கோட்டையன் - Agnipuratchi

பாடம் நடத்த ஏதுவாக ஆசிரியர்களுக்கும் மடி கணினி-அமைச்சர் செங்கோட்டையன்

Share This

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்குத் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திறக்கப்படும் இதுபோன்ற மையத்தில், குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் எப்போது நடைபெறும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும்உள்ளிட்ட சந்தேகங்களை மாணவர்கள் தீர்த்துக்கொள்ளலாம்" என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், வரும் கல்வியாண்டு முதல் பாடம் நடத்த ஏதுவாக ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்றும், ஆதிதிராவிடர், கள்ளர், பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages