தமிழகத்தின் 13மாவட்டங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உயர்மின் கோபுரத்தில் தூக்கிடுவது போல செய்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதனை பற்றி விவசாயிகள் கூறும்போது "உயர்மின் கோபுரம் அமைப்பதால் விளை நிலங்கள் விலை குறைவது மட்டுமின்றி தங்களால் வங்கிகள் கடன் எதுவும் பெறமுடியவில்லை என்றார். மேலும் பண்ணைகள் மற்றும் நிலத்தடி நீர் எடுக்க மிகவும் சிரமப்படுவதாகவும் கூறினார்கள். இலங்கைக்குக் கடலடியில் கேபிள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லும்போது தமிழகத்திலும் கேபிள் வழியாக மின்சாரம் கொண்டு சென்றால் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
No comments:
Post a Comment