வங்கிப் பணியாளர் சங்கங்கள் இருநாட்கள் வேலைநிறுத்தம் - Agnipuratchi

வங்கிப் பணியாளர் சங்கங்கள் இருநாட்கள் வேலைநிறுத்தம்

Share This

வங்கிப் பணியாளர் சங்கங்கள் இருநாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் நாளை முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ஊதிய உயர்வு, பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்க எதிர்ப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 21ல் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். டிசம்பர் 24 திங்கட்கிழமை மட்டும் வங்கிகள் இயங்கும். டிசம்பர் 25 செவ்வாயன்று கிறிஸ்துமஸ் என்பதால் அரசு விடுமுறை. டிசம்பர் 26ஆம் நாள் செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தத்துக்கு வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் வெள்ளி முதல் புதன்வரை திங்கள் தவிர்த்து 5நாட்களில் வங்கிகள் செயல்படாத சூழல் நிலவுவதால் வங்கிப் பணிகளும் ஏடிஎம் சேவையும் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages