சர்தார் வல்லபாய் பட்டேலின் மறைவு தினம் இன்று - Agnipuratchi

சர்தார் வல்லபாய் பட்டேலின் மறைவு தினம் இன்று

Share This

சர்தார் வல்லப்பாய் படேல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார். சிறு வயதில் அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வாராம். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது என்று அவரது வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று டிசம்பர் 15ம் தேதி அவருடைய மறைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages