செந்தில் பாலாஜி சென்றது குறித்து தினகரன் பேட்டி - Agnipuratchi

செந்தில் பாலாஜி சென்றது குறித்து தினகரன் பேட்டி

Share This

சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், செந்தில் பாலாஜியை 2006ம் ஆண்டு முதல் நன்றாக தெரியும். சிறிது காலமாக என்னிடம் சொந்த பிரச்சனை இருப்பதாக கூறினார். இந்நிலையில் திமுகவிற்கு சென்றுவிட்டார். யாராக இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் சொந்த விருப்பப்படி செல்லலாம். கரூர் மாவட்டத்தில் அவர் சேகரித்த உறுப்பினர் விண்ணப்பங்கள் என்னிடம் வரவில்லை என்றுதான் கவலையே தவிர, அவர் சென்றது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்று கூறினார். மேலும், பேசிய அவர், 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இல்லை. 1 கோடியே 20 லட்சம் உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய இயக்கமாக அமமுக வளர்ந்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் அதில் வெற்றிபெற போவது நாங்கள்தான். எப்போதும் அமமுக சிறப்பாக இயங்கும் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages