அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட கிருஷ்ணகிரி அரசு பள்ளி மனைவிகளான பிரஜனி மற்றும் சுரேகா இனைந்து பேருந்தில் படியில் பயணம் செய்வதை தடுக்க புதிய கருவியை வடிவமைத்துள்ளார்கள். இந்த கருவியை சமீபத்தில் பள்ளி அளவில் நடந்த அறிவியல் மாநாட்டில் காட்சிக்கு வைத்தனர், இதற்க்கு மாவட்ட மற்றும் மண்டல அளவில் முதலிடம் பெருத்தது.
இந்தியா அறிவியல் புதுமைகள் கண்டுபிடிப்பு - 2018 என்ற தலைப்பில் நடந்த மாவட்ட அளவிலான மாநாட்டிலும் இந்த கருவி முதல் பரிசு மற்றும் தங்க பதக்கத்தை வென்றுள்ளது.
இது குறித்து மாணவிகள் பிரஜினி மற்றும் சுரேகா கூறும்போது, இந்த கருவி படியில் நின்று பயணம் செய்பவர்களை அலாரம் செய்து எச்சரிக்கும், மேலும் வாகனத்தின் கட்டுப்பாட்டுடன் இணைக்கப்படுவதால் வாகனத்தின் வேகத்தை தானாகவே குறைக்கும், இதனால் பேருந்து ஓட்டுநர் மற்றும் சக பயணிகள் படியில் நிற்பவர்களை எச்சரித்து மேலே வரும்படி அழைக்கவும் உதவும்.
No comments:
Post a Comment