மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகரில் வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது எழுந்த நின்ற கட்கரி, திடீரென மயங்கி சரிந்தார். அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாங்கிப் பிடித்தார். இதனால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment