ஜெயலலிதா மரணம் தொடர்பான செய்திகளை வெளியிட கட்டுப்பாடு - Agnipuratchi

ஜெயலலிதா மரணம் தொடர்பான செய்திகளை வெளியிட கட்டுப்பாடு

Share This

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டு, ஜெயலலிதாவின் உதவியாளர்கள் முதல் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வரை பல்வேறு நபர்களை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் உள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் உரிய அனுமதியின்றி ஒளிபரப்பக் கூடாது என்று ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த அறிக்கையில், "ஜெயலலிதாவின் மரணம் குறித்த தகவல்களை செய்தி வடிவிலோ, தொடராகவோ, விவாதமாகவோ ஆணையத்தின் உரிய அனுமதியின்றி பத்திரிகைகளோ, தொலைக்காட்சிகளோ வெளியிடக் கூடாது. இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages