பாம்பன் பாலத்தில் திடீர் விரிசல் -சீரமைக்கும் பணி தீவிரம் - Agnipuratchi

பாம்பன் பாலத்தில் திடீர் விரிசல் -சீரமைக்கும் பணி தீவிரம்

Share This

பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் விரிசலால் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விரிசல் ஏற்பட்டுள்ள தூக்கு பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் இப்பாலம் வழியே செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 5 மணிக்கு சென்னை செல்ல கூடிய ரயிலும், 8 மணிக்கு செல்ல கூடிய ரயிலும், திருச்சி-ராமேஸ்வரம், மதுரை-ராமேஸ்வரம் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 104 ஆண்டு கால பழமையான பாம்பன் ரயில்வே பாலத்தில் திடீரென பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதை சீர் செய்யும் பணியில் ஏராளமான ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கொச்சி வேம்பனாடு கடல் பாலத்தையடுத்து இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages