மதுரை அருகே தோப்பூரில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பில் 197 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளில் தமிழக அரசு இறங்கியிருப்பதாக கூறப்பட்டது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ மூலம் வெளியானது. இதனையடுத்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் தற்போது மத்திய நிதிக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. மத்திய நிதிக்குழு ஒப்புதல் அளித்த பின்னர், மத்திய அமைச்சரவை கூடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய 45 மாதங்களில் மருத்துவமனை முழு பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment