அணைகள் இல்லாத மாவட்டங்களுக்கு முக்கியத்துவம்-தமிழக அரசு - Agnipuratchi

அணைகள் இல்லாத மாவட்டங்களுக்கு முக்கியத்துவம்-தமிழக அரசு

Share This

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள், 14,098 ஏரிகள் உள்ளன. இதன் மூலம், 250 டிஎம்சி நீர் வரை சேமிக்கப்படுகிறது. இந்த நீரை கொண்டு ஓரளவு பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது. இந்நிலையில் இனிவரும் காலத்தில் பாசன மற்றும் குடிநீர் தேவைக்கு கூடுதல் நீர் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் மாநில நீர் மேலாண்மை முகமை சார்பில் ஆய்வு நடந்தது. அதில், வரும் 2050ல் கூடுதலாக 67 டிஎம்சி வரை குடிநீர் தேவை அதிகரிக்கும் என்று இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், பருவமழை மூலம் கிடைக்கும் நீரை முழுவதுமாக சேமிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள ஏரிகளை இணைத்தோ அல்லது புதிதாகவோ நீர்த்தேக்கங்களை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம் தலைமையில் பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் சார்பில், புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கும் வகையில், அதற்கான அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages