சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை துப்புரவு பணிகளில் திருப்தியளிக்கவில்லை -உயர்நீதிமன்றம் - Agnipuratchi

சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை துப்புரவு பணிகளில் திருப்தியளிக்கவில்லை -உயர்நீதிமன்றம்

Share This

கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யாவிட்டால் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னையில் கொசு ஒழிப்புக்கும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டு⚖ இருந்தது. இதனையடுத்து இதன் விசாரணை இன்று நடந்தது. சென்னை மாநகராட்சி ஓராண்டுக்குப் பின் தாக்கல் செய்த அறிக்கையில், கால்வாய்களைத் தூர்வார ஆயிரத்து 34 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், நீர்நிலைகளில் இருந்து பத்தாயிரம் டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மற்றவர்கள் செய்த பணிகளைத் தவிர்த்து மாநகராட்சி என்னென்ன பணிகளைச் செய்தது, அந்தப் பணிகளை யார் மேற்கொண்டார்கள்⁉என்பதைத் தெரிவிக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்திய நீதிபதிகள், துப்புரவு பணிகளில் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages