திரையுலக வாழ்வு குறித்து நடிகர் கமல் பரபரப்பு பேட்டி - Agnipuratchi

திரையுலக வாழ்வு குறித்து நடிகர் கமல் பரபரப்பு பேட்டி

Share This

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரான கமல் அண்மையில் தனது திரையுலக வாழ்வு குறித்து பேட்டியளித்துள்ளார். அதில அவர், தற்போது நான் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும். இந்தியன்-2 படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன். நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும் எனது திரைப்பட நிறுவனம் எங்களது கட்சியை வழி நடத்த நிதி தேவைப்படுவதால் தொடர்ந்து செயல்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியன்-2 படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் எனது அரசியல் பணி முழு நேரமாக மாறும். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு 2019 தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும் கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருந்தாலும், அரசியல் ரீதியாக கமல்ஹாசன் தெரிவிக்கும் கருத்துக்கள் மற்ற கட்சிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages