உள்ளாட்சி தேர்தல் விவகாரம்-மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு - Agnipuratchi

உள்ளாட்சி தேர்தல் விவகாரம்-மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

Share This

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரசிம்மா, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாததற்கு தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் தான் காரணம் என்றார். மேலும், வேண்டுமென்றே உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதாக கூறும் குற்றச்சாட்டு தவறானது என்றும் அவர் வாதிட்டார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள், அன்று மாநில தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையத்தின் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages