நாளை தெலுங்கானா முதல்வராக பதவியேற்கும் சந்திரசேகர ராவ் - Agnipuratchi

நாளை தெலுங்கானா முதல்வராக பதவியேற்கும் சந்திரசேகர ராவ்

Share This

நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமுள்ள 119 இடங்களில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து சந்திரசேகர ராவ் நாளை முதல்வராக பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பதவியேற்கும் நேரம், இடம் உள்ளிட்டவைகள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. தெலுங்கானாவின் கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்ட டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். முன்கூட்டியே சட்டமன்றத்தை கலைத்து சந்திரசேகர ராவ் இந்தத் தேர்தல் போட்டியிட்டது மிகவும் சவாலானதாக இருந்தது. மேலும் சந்திரசேகர ராவ், அம்மாநிலத்தின் முதல்வராக 2வது முறையாக நாளை பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages