தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்குத் தடை - Agnipuratchi

தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்குத் தடை

Share This

தஞ்சை பெரிய கோயிலின் வளாகத்தில் பச்சை போர்வை போர்த்திய புல்வெளி உள்ளது, இதனை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இதில் நாளை முதல் 2 நாட்களுக்கு வாழும்கலை சார்பாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் தியான நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அழகிய புல்வெளியில், பள்ளம் தோண்டி பந்தல் போட்டு அலங்கோலம் ஆக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை இதற்க்கு எப்படி அனுமதி கொடுத்தது என்று சமூகஆர்வலர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது ?

இதனிடையே இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் "யமுனை ஆற்றின் கரையில் இது போன்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்பட்டதாக கூறி, பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்ததை" நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற கோவிலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதித்தும் உத்தரவிட்டனர்.

மேலும் இது தொடர்பாகதஞ்சை மாவட்ட ஆட்சியர் வரும் 10-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages