ஃபெரோஸ் கான் அப்துல்லா SP. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காவல்துறை மூலம் வழங்கினார் காவல்துறைக்கு மக்கள் பாராட்டு...! - Agnipuratchi

ஃபெரோஸ் கான் அப்துல்லா SP. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காவல்துறை மூலம் வழங்கினார் காவல்துறைக்கு மக்கள் பாராட்டு...!

Share This

திருநெல்வேலி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையாளராக இருந்து வருகிறார் ஃபெரோஸ்கான் அப்துல்லாஹ்.
இவர் சென்னை காஞ்சிபுரம் விழுப்புரம் கடலூர் வேலூர் மதுரை ஆகிய மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியபோது பொதுமக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைத்து குற்ற செயலில் ஈடுபடும் நபர்களை சரியான அடையாளம் கண்டு அவர்களை பிடித்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளார் இதுபோக ஏழை எளியவர்கள் இவரை நாடி வருகின்ற பொழுது பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார் இவருடைய நண்பர்கள் குழந்தைகள் ஏழை எளிய மக்களின் கல்லூரி படிப்புக்கு உதவி செய்து வந்தவர் ..

அடாத மழை பொழிந்தாலும் விடாத வெயில் அடித்தாலும் கடுமையாக குளிர் காற்று. இருந்த போதிலும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் முழுநேரமாக செயல்பட்டு வருவது காவல்துறை  பணிகள்இருந்து வருகிறது...

தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு பணி வழங்கிட நாகபட்டினம் பகுதியில் வேதாரண்யம். பிராந்திக்கரை. வாய்மேடு. கோடிக்கரை.  கரியாப்பட்டினம் பகுதிகள் ஈடுபட்டு வருகிறார்..
வேதாரண்யம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் தனது ஒரு மாத சம்பளத்தை  முதலிலும் அதனிடத்து நண்பர்கள் சமூக ஆர்வலர்களிடம் தெரிவித்து உதவியுடன் அந்த பகுதியில் வசிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 5 லட்சத்துக்கான பொருள்களை.ஆயிரத்து நூறு.1100. குடும்பங்களுக்கு சூரிய ஒளி விளக்குகள் தார்ப்பாய்கள். போர்வைகள் அரிசி பருப்பு . சக்கரை மிளகாய் தூள் மஞ்சள் தூள் கோதுமை ரவை. சமையல் எண்ணெய். மளிகை பொருள்கள். மெழுகுபத்தி கொசுபத்தி தண்ணீர் வேஷ்டி
சேலைகள்.பிஸ்கட் வகைகள் போன்ற அடங்கிய பேக்கேஜ் கிட்டு வகைகள் ஏற்பாடு செய்து அதை நேரில் சென்று  வழங்கியுள்ளார்.. இதுபோக குடிநீர் தண்ணீர் டேங்கில்  ஏற்றுவதற்கு திருநெல்வேலியிலிருந்து ஜெனரேட் வரவழைத்து டீசல் அடித்து தண்ணீர் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் அந்த பகுதிகளுக்கு ஏற்பாடு செய்தார்.மற்ற பகுதிகள் நண்பர்கள் மூலமாக பொருளை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.  இதனுடைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது காவல்துறை என்றாலே மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில். காவல்துறையினரும் மக்கள் நலனில் அக்கறை உள்ளது என்பதை எடுத்துக் காட்டாக ஃபெரோஸ் கான் அப்துல்லா செயலை சமூக ஆர்வலர்களும் பல்வேறு மக்களும் இவரை பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள்.. போக்குகின்ற...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages