ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தன. மெகபூபா முப்தி முதல்வராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம், மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா கட்சி வாபஸ் பெற்றது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் ஆளுநர் ஆட்சி அமல் படுத்தப்பட்டு சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது. 6 மாதம் ஆளுநர் ஆட்சி செய்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்திலும் கலைஞரின் ஆட்சியை கலைத்துவிட்டு 1976ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி முதல் 1977ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரையும், எம்.ஜி.ஆரின் ஆட்சியை கலைத்துவிட்டு 1980ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரையும், ஜானகி ராமச்சந்திரனின் ஆட்சியை கலைத்துவிட்டு 1988ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி முதல் 1989ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி வரைக்கும் குடியரசு தலைவர் ஆட்சி செய்துள்ளார்.
No comments:
Post a Comment