ரத்ததானம் செய்த வாலிபர் 2016ம் ஆண்டு முதல் ரத்ததானம் செய்து வந்த நிலையில் எச்.ஐ.வி. தொற்றுபற்றி அவருக்கு யாரும் தெரிவிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறவினருக்கு ரத்தம் தேவைப்பட்டதால் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அவர் ரத்தம் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் வெளிநாடு செல்ல திட்டமிட்ட வாலிபர் அதற்காக மேலூரில் ரத்த பரிசோதனை செய்தபோது தான் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது பற்றி தெரியவந்தது. உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனை சென்ற வாலிபர் தான் வழங்கிய ரத்தத்தை உறவினருக்கு செலுத்த வேண்டாம் என்று கூறினார். ஆனால் உறவினருக்கு அந்த ரத்தம் செலுத்தப்படவில்லை என கூறிய ரத்த வங்கி ஊழியர்கள் அதனை சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கி இருப்பது தெரியவந்தது. ரத்த தானம் வழங்கிய வாலிபர் கடந்த 26ம் தேதி கமுதியில் மனவேதனையில் எலி மருந்து குடித்து மயக்கமடைந்தார். அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரம் ரத்தம் அளித்த இளைஞர் உயிரிழப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment