விதிமீறல் கட்டடங்களுக்கான மின்சாரம், குடிநீர் இணைப்பை துண்டிக்க நீதிமன்றம் உத்தரவு - Agnipuratchi

விதிமீறல் கட்டடங்களுக்கான மின்சாரம், குடிநீர் இணைப்பை துண்டிக்க நீதிமன்றம் உத்தரவு

Share This

சென்னை மண்ணடியில் சட்ட விரோதமாக கட்டடம் கட்டுவதாக கூறி, அதன் பணிகளுக்கு மாநகராட்சி தடை விதித்தது. இதை, எதிர்த்து அந்த கட்டடத்தின் உரிமையாளர் மெஹ்ராஜ் பேகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளின் உதவி இல்லாமல் இதுபோன்ற விதிமீறல்களில் யாரும் ஈடுபட முடியாது என குறிப்பிட்ட ⚖நீதிபதிகள், நேர்மையாக செயல்படாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages