புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார் சுனில் அரோரா - Agnipuratchi

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார் சுனில் அரோரா

Share This

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஓம் பிரகாஷ் ராவத் நேற்று ஓய்வு பெற்றார். இதனால் தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோராவைத் தலைமைத் தேர்தல் ஆணையராகக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். இந்நிலையில் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் சுனில் அரோரா நேற்று முறைப்படி தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 62வயதாகும் சுனில் அரோரா ஏற்கெனவே செய்தி ஒலிபரப்புத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர். இன்னும் மூன்றாண்டுகளுக்கு அவர் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages