தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தலையிலும் மார்பிலும் சுடப்பட்டு இறந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை - Agnipuratchi

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தலையிலும் மார்பிலும் சுடப்பட்டு இறந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை

Share This

வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேர் தலையிலும் நெஞ்சிலும் சுடப்பட்டு மாண்டதாக, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி சுட்டில் பலியான இளம் பெண்ணின் தலையின் பின்புறத்திலிருந்து சுடப்பட்டுள்ளதாகவும் அந்த தொட்ட அந்த பெண்ணின் வாயிலிருந்து வெளியேறியதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கையை அரசாங்க மருத்துவமனைகள் சிலவற்றைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை உருவாக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்தியக் காவல்துறை விதிமுறைகளின்படி, அடக்கமுடியாத போராட்டங்களின்போது போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதியுண்டு. ஆனால், சுடும்போது அவர்கள் இடுப்புக்குக் கீழ் குறிவைத்துச் சுட வேண்டும். அதுவும் கூட்டத்தில் பெரிய அச்சுறுத்தலாக இருப்பவர்களை மட்டுமே சுட வேண்டும் என்று விதி உள்ளது. இந்நிலையில் தலையில் குண்டு பாய்ந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages