எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு- மருத்துவர் ச.இராமதாசு இரங்கல் - Agnipuratchi

எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு- மருத்துவர் ச.இராமதாசு இரங்கல்

Share This

போர்க்குணம் மிக்க எழுத்தாளரும், எனது நண்பருமான பிரபஞ்சன் உடல்நலக் குறைவால் புதுவையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

புதுவையில் பிறந்து தஞ்சாவூரில் ஆசிரியராக பணியைத் தொடங்கிய பிரபஞ்சன், பத்திரிகை உலகிலும், இலக்கிய உலகிலும் முத்திரை பதித்தவர். வாழ்க்கையில் சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாளர். சாகித்ய அகாடமி, பாஷாபரிசத், தினத்தந்தி நிறுவனத்தின் சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது, இலக்கிய சிந்தனை விருது உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர்.

பிரபஞ்சன் எனது 30 ஆண்டு கால நண்பர் ஆவார். ‘பெண்ணே நீ’ இதழ், மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான கருத்துருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தினப்புரட்சி ஏட்டில் கட்டுரைகளை எழுதினார். என்னை அடிக்கடி சந்தித்து அரசியல்-சமூக சிக்கல்கள் குறித்து விவாதிப்பார். நானும் அவரும் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்றிருக்கிறோம். மற்ற அரசியல் கட்சித் தலைவரையும் விட என்னுடன் நெருக்கமாக இருந்தவர்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் அவருக்கு படைப்பருவி என்ற விருது வழங்கி சிறப்பித்தேன். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்த அவர், விரைவில் நலம் பெறுவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அவரது மறைவு தனிப்பட்ட முறையில் வருத்தம் அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எழுத்துலகைச் சேர்ந்த அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages