நம்மில் எத்தனைபேருக்குதெரியும்!! எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு முதன்முதலில் அடிக்கல் நாட்டியது மருத்துவர் அன்புமணிஇரமதாசு - Agnipuratchi

நம்மில் எத்தனைபேருக்குதெரியும்!! எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு முதன்முதலில் அடிக்கல் நாட்டியது மருத்துவர் அன்புமணிஇரமதாசு

Share This

அன்புமனி இராமாதாஸ் மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்த போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் அந்த நிகழ்வில் தமிழக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார், மேலும் முதல்கட்ட பணிகளுக்காக ரூ.150 கோடி நிதியும் ஒதுக்கினார் அன்புமனி இராமாதாஸ். ஆனால் அன்றைய கருணாநிதி அரசு பணியை தொடங்கவேயில்லை, பின்னர் ஜெயலலிதா அரசு அதற்கான நிதியை வேறு திட்டங்களுக்கு செலவழித்து விட்டது.
அப்போதே மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்பட்டிருந்தால் கடந்த 10 ஆண்டுகளில் அது விரிவாக்கம் செய்யப்பட்டு தென் மாநிலங்களின் மிகப்பெரிய மருத்துவமனை மற்றும் கல்லூரியாக உருவெடுத்திருக்கும்.

இதற்கு பின்னால் என்ன வாக்கு வங்கி அரசியல் இருந்து விட போகிறது என்று நீங்கள் கேட்கலாம்! சொல்கிறேன் கேளுங்கள்.

மதுரையில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனை இலாபகரமாக இயங்கி வருகிறது. அந்த மருத்துவமனையின் நிறுவனர் குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்த ஒரு இயக்கத்தையும் நடத்தி வருகிறார்.   அங்கு எய்ம்ஸ் அமைந்தால் அவரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் மேலும் அவர் சார்ந்த சமுதாய வாக்குகளை இழக்கும் சூழல் உருவாகிவிடும் என்று அஞ்சி கலைஞர் மற்றும் ஜெயலலிதா இருவருமே எய்ம்ஸ் அமைப்பதில் கடைசிவரை அக்கறை காட்டவில்லை.

பின்னர் தஞ்சையில் எய்ம்ஸ் அமைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்ட போதும் அதே சிக்கல் ஏற்பட்டது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தஞ்சையிலும் ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறார்களாம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைக்கலாம் என்றால், கொங்கு மண்டலத்தில் மருத்துவ தொழிலில் தாங்கள் கோலோச்ச முடியாமல் போய்விடும் என்று அஞ்சிய கோவை மாநகரில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் மறைமுகமாக எதிர்த்தனர்.

இவற்றையெல்லாம் கடந்து இறுதியாக மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது. இது மக்களுக்கான அரசா? முதலாளிகளுக்கான அரசா? என்று  பொறுத்திருந்து பார்ப்போம்!


1 comment:

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages