பொங்கல் பண்டிகைக்காக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை அடுத்து, வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகள் கூறுகையில் இலவச திட்டங்களை பயன்படுத்தும் போது பயனாளிகளை வரையறை செய்ய வேண்டும். ஓட்டுக்காக மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசு வழங்குவதாக மக்கள் கருதுகிறார்கள். அனைவருக்கும் வங்கிக் கணக்கு உள்ள போது மக்களை வரிசையில் காக்க வைப்பது சரியா❓இலவசங்களை அனைவருக்கும் வழங்கக் கூடாது என முடிவு எடுக்கவும். ஆந்திரா, கர்நாடகா, கேரள போன்ற வெளி மாநிலங்களுக்கே தமிழக ரேஷன் அரிசிகள் கடத்தப்படுகிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இலவசங்களை வழங்கிக் கொண்டு இருப்பீர்கள்❓தமிழகத்தில் வெளி சந்தைகளில் இலவச அரிசி விற்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்
அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு -சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment