ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள்-மாடுபிடி வீரர்களுக்கு நாளை முன்பதிவு - Agnipuratchi

ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள்-மாடுபிடி வீரர்களுக்கு நாளை முன்பதிவு

Share This

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை அதன் உரிமையாளர்கள் தயார்ப்படுத்தி வருகின்றனர். காளைகளோடு சேர்ந்து மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவனியாபுரத்தில் வரும் 15ம் தேதி, பாலமேடு 16ம் தேதி மற்றும் அலங்காநல்லூரில் 17ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் நடராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவுகள் நாளை தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages