பொங்கல் பரிசான ரூ.1000 வழங்க தடை விதிக்க கோரிய வழக்கு-உயர்நீதிமன்றம் தடை - Agnipuratchi

பொங்கல் பரிசான ரூ.1000 வழங்க தடை விதிக்க கோரிய வழக்கு-உயர்நீதிமன்றம் தடை

Share This

கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், ஏற்கனவே கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்க மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு வழங்கினால், தேவையில்லாத நிதி சுமை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நலத்திட்டங்களை உருவாக்கி பொது மக்களுக்கு மாநில அரசு வழங்கலாம் என்றும், அதுவும் பொருளாதார நிலையின் அடிப்படையில் உருவாக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே 1000 ரூபாய் வழங்குவது ஏற்க முடியாது என்றும், தடை விதிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில், இது கட்சி பணம் என்றால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று கூறிய நீதிபதி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவா்களுக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மட்டும் பொங்கல் பரிசுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages