பெண் போலீசாரின் பணி நேரம் நிர்ணயம் - Agnipuratchi

பெண் போலீசாரின் பணி நேரம் நிர்ணயம்

Share This

பெண் போலீசாருக்கு பணி நேரம் நிர்ணயம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு பணி நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றும் பெண் போலீசார் காலை 10 மணி முதல் இரவு 7 வரை மட்டுமே பணியாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் போலீசாரின் குடும்ப பணியை கருத்தில் கொண்டு காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் அவசர காலம், விஐபி பாதுகாப்பு இருக்கும் நாட்களை தவிர பிற நாட்களில் இந்த பணிநேரம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages