மத்திய அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அமலாகிறது - Agnipuratchi

மத்திய அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அமலாகிறது

Share This

மத்திய அரசு வேலைகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் நடைமுறை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்த முறையான உத்தரவை மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகார வழங்கல் துறை பிறப்பித்துள்ளது. அதில், "எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் சலுகையை பெறாதவர்கள், அவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக இருக்கிறபோது அவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் சலுகையைப் பெற அடையாளம் காணப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட விவசாய நிலம், நகராட்சி பகுதிகளில் ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு மேல் இருந்தால், நகராட்சி தவிர்த்து பிற பகுதிகளில் 600 சதுர அடியோ அதற்கு மேலோ, வீட்டுமனை உள்ளவர்கள், உள்ளிட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages