ஊதிய உயா்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகளுடன் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிாியா்கள் அனைவரும் வருகின்ற 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இன்று காலை ஜாக்டோ-ஜியோ உயா்மட்டக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போராட்டத்தை தொடா்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை இன்று ஓர் அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், பொதுத்தோ்வுகள் நெருங்கி வருவதால் ஆசிாியா்களின் போராட்டமானது மாணவா்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே அவா்களுக்கு பதிலாக ரூ.7,500 தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிாியா்களை நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவா்களை பெற்றோா் ஆசிாியா் கழகத்தின் மூலம் தோ்வு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியா்களை பணியமா்த்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment