திருச்சியில் இன்று நடைபெறவுள்ள அரசியல் கட்சி மாநாட்டிற்கு தொண்டர்களை ஏற்றிச் செல்ல அரசு பேருந்துகளுக்கு வாடகைக் கட்டணமாக 11.50 லட்சம் ரூபாய் சென்னை போக்குவரத்துக் கழகத்தில் செலுத்தப்பட்டது. அந்த தொகையை வாங்கி கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் கட்டுவதற்காக அரசு போக்குவரத்து கழகத்தின் பெரம்பலூர் கிளையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் அரியலூரைச் சேர்ந்த செந்தில்குமார் தலைமையிலான போக்குவரத்து கழக ஊழியர்கள் 5 பேர் சென்னை வந்தனர். பல்வேறு கிளைகளுக்கு வழங்க வேண்டிய 11.50 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி ஒரே பெட்டியில் போட்டுக் கொண்டு, நள்ளிரவு 2 மணியளவில் திருச்சிக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினர். இதையடுத்து பணப்பெட்டியை லக்கேஜ் கேரியரில் வைத்து அனைவரும் உறங்கியதாகவும், பெரம்பலூரில் தேநீர் அருந்த இறங்கும் போது, பணப்பெட்டி காணாமல் போனதை கவனித்ததாகவும் கூறி பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய புறக்காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில், அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் லட்சக்கணக்கான ரூபாய் கட்டண தொகையை கையில் எடுத்து வரவேண்டிய அவசியம் என்ன⁉என்று காவல்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, இதில் அதிகாரிகள் முறைகேடு, கையாடல் உள்ளதா⁉என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.11.50 லட்சம் அரசு போக்குவரத்துக்கழக பணம் மாயம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment