சென்னை சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன்வளத் துறை அலுவலகத்தை நிதியமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அரசு தனது நிலைப்பாட்டை அவர்களிடம் தெரிவித்தும் தொடர்ந்து யாருடைய தூண்டுதலின் பேரிலோ போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் அரசிற்கு வரக்கூடிய வருமானத்தில் 71 சதவீதத்தை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும், தமிழக அரசு வழங்கி வருகிறது. எனவே அதனை புரிந்து கொண்டு தங்களது வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டுமானாலும் ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்காக மக்களிடம் தான் வரியை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. எனவே மக்களிடம் வரியை உயர்த்தி அரசு ஊழியர்களுக்கு தர முடியுமா⁉" என்று கூறினார்.
ஜாக்ட்டோ ஜியோ போராட்டம் குறித்து ஜெயக்குமார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment