வல்லூர் அனல்மின் நிலையம் மூடல்-1500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு - Agnipuratchi

வல்லூர் அனல்மின் நிலையம் மூடல்-1500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

Share This

மத்திய அரசின் விதிகளை மீறி சதுப்பு நில பகுதிகளில் வல்லூர் அனல்மின் நிலையம் நிலக்கரி சாம்பலை கொட்டி வந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சரவணன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். விதிகளை பின்பற்றாமல், சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனல்மின் நிலையம் செயல்பட்டுள்ளதாக கருத்து கூறிய நீதிபதிகள், மத்திய அரசு அளித்த அனுமதி 2018 மார்ச்சுடன் முடிவடைந்தது என்றும், மத்திய அரசு அளித்த அனுமதியை புதுபிக்காமல் அனல்மின் நிலையம் தொடர்ந்து செயல்படுவதாகவும் தெரிவித்தனர். இதனால் வல்லூர் அனல்மின் நிலையத்தை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அந்த மின்நிலையத்தில் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் உருவாகும் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை⚖ எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அனல்மின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages