டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பணம் திருடுபோவதை தடுக்க ரிசர்வ் வங்கி திட்டம் - Agnipuratchi

டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பணம் திருடுபோவதை தடுக்க ரிசர்வ் வங்கி திட்டம்

Share This

தற்போதைய காலகட்டத்தில்  டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு தங்கள் தகவல் திருடு போய்விடுமோ என்ற பயம் உள்ளது. இதை போக்க புதிய தொழில்நுட்பத்தை ரிசர்வ் வங்கி செயல்படுத்த உள்ளது. அதாவது, வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ள டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டில் உள்ள எண்ணுக்கு பதிலாக புதிய எண் வழங்கப்படும். இதை பயன்படுத்தி எந்த இணையதளத்திலும் தாராளமாக பயன்படுத்தலாம். வெளிநாடு செல்லும்போதும் இந்த ’டூப்ளிகேட்’ டோக்கன் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்யலாம். ஆனால், ஒவ்வொரு பரிவர்த்தனை முடிந்ததும் அந்த எண் மாறிவிடும். இதனால் உண்மையான கார்டு எண், வங்கி விவரங்கள் திருடு போகாது. டோக்கன் கார்டுகளை இ-வாலட், ஆன்லைன் இணையதளங்கள், பரிவர்த்தனை கருவிகளில் பயன்படுத்த புதிய விதிகள் மூலம் ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் இத்தகைய வசதிகளை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages