அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கியவருக்கு கார் பரிசளிப்பு - Agnipuratchi

அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கியவருக்கு கார் பரிசளிப்பு

Share This

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்றைய போட்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வெள்ளை கொம்பன், செவலைக் கொம்பன், சின்ன கொம்பன் என்ற 3 காளைகள் பங்கேற்றன. ஒட்டுமொத்தமாக 729 காளைகள் களம் இறக்கப்பட்டு அவற்றை 697 காளையா்கள் அடக்க முயன்றனா். இதில் 40 வீரா்கள் காயமடைந்தனா். அவா்களில் 15 போ் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், இன்றைய போட்டியில் 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமாா் சிறந்த வீரராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு காா் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று களத்தில் நின்று விளையாடிய காளையின் உரிமையாளருக்கும் காா் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages