காணும் பொங்கலையொட்டி பெரியர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து கொண்டு நண்பர்கள் மற்றும் தங்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே சுற்றுலாத்தலங்களில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக சுற்றுலா இடங்களான வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, பொழுது போக்கு பூங்காக்கள், மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள், திரையரங்குகள், வணிக வளாகம், கோயில்கள், தேவாலயங்களுக்கு வெளிமாவட்டம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்துள்ளனர். இதனால், பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் மகேஷ் குமார் அகர்வால், தினகரன், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் ஆகியோர் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், முக்கிய சுற்றுலா தலமான மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டம்-நிரம்பி வழியும் கூட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment