சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம் செய்ததை தொடர்ந்து நடை அடைப்பு⁉ - Agnipuratchi

சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம் செய்ததை தொடர்ந்து நடை அடைப்பு⁉

Share This

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட பெண்கள் செல்ல முடியாமல் இருந்து வந்த சூழ்நிலையில் இன்று காலை 2 பெண்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபாடு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலாபுரத்தை சேர்ந்த கனகதுர்கா, கோழிக்கோடை சேர்ந்த பிந்து, ஆகிய 40 வயது பெண்கள் இருவரும் சபரிமலைக்கு இன்று அதிகாலையில் சன்னிதானத்திற்கு இருமுடி கட்டி சென்றனர். இருப்பினும் அவர்கள் 18 படி ஏறவில்லை. இருமுடி காட்டாமல் சபரிலை வரும் பக்தர்கள் செல்லும் வழியில் சென்று இவர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பரிகார குற்றம் என ஆணை பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பெண்கள் இருவர் தரிசனம் செய்த நிலையில் சபரிமலை மேல்சாந்தி மற்றும் தந்திரி ஆலோசனையில் ஈடுப்பட்டனர். அதன் பின்னர், சுத்திகலச பூஜைக்காக சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்பு ஒரு மணி நேரம் சிறப்பு பூஜை செய்த பின் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages