ஜெயலலிதா இறந்ததை தொடர்ந்து அவர் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை நினைவிடமாக அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவரது இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது குறித்து அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமுதாய கூடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். அவர்கள் கூறியதாவது ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் எங்களுக்கு பல இடையூறுகள் இருந்தது. தற்போது நினைவு இல்லமாக அமைக்கும் போது மேலும் பல இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த போயஸ் தோட்டத்திற்கு செல்லும் பாதை என்பது ஒருவழி பாதையாக தான் உள்ளது. நினைவிடமாக அமைக்கப்பட்டால் அதிகப்படியான பொதுமக்கள், பல்வேறு வாகனங்கள் வரக்கூடும். வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும். மேலும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட செல்ல முடியாத ஒரு சூழல் நிலவக்கூடம்" என்று தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார்கள்.
ஜெயலலிதாவின் நினைவில்லம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment