மதுரை ஒத்தக்கடையில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதன் முடிவில், ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், சுரேஷ், செல்வராஜ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள், "நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக, எங்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. வருகிற 11ந் தேதிக்குள் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால், இந்த மாதம் 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குவோம். தொடக்கக்கல்வியை உயர்நிலைக்கல்வியுடன் இணைக்கும் முடிவை கைவிடவில்லை என்றால் கல்வித்துறை அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டுவோம். அதேபோல பள்ளிக் கல்வித்துறை செயலாளரை வேறு துறைக்கு மாற்ற வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவதை கைவிட வேண்டும் என்று அவர்கள் கூறினர். தொடர்ந்து பேசிய அவர்கள், "நாடுதழுவிய பொது வேலை நிறுத்தப்போராட்டத்திற்கும், ஜாக்டோ-ஜியோவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதனை தெரளிவுபடுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 22ம் தேதி முதல் தொடர் போராட்டம் -ஜாக்டோ ஜியோ
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment