மத்திய அரசுக்கு எதிராக 10 தொழிற்சங்கத்தினர், வங்கி ஊழியர்கள், போக்குவரத்து துறையினர், மருத்துவம், தொலைத் தொடர்பு துறையினர் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய போராட்டத்தில் ஏற்கனவே அறிவித்தபடி இன்றும் நாளையும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் 20 கோடி பேர் பங்கேற்று, டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், ஸ்டிரைக்கில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தலைமை செயலாளர் எச்சரிக்கை⚠ விடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் ஸ்டிரைக் நடக்காது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதே சமயம் அசாமில் ரயிலை மறித்து சிஐடியு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேலை நிறுத்ததினால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு தழுவிய போராட்டம்-தமிழக எல்லையில் போக்குவரத்து முடக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment