சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணி-சர்வதேச வங்கிகளுடன் பேச்சுவார்த்தை - Agnipuratchi

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணி-சர்வதேச வங்கிகளுடன் பேச்சுவார்த்தை

Share This

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், 119 கி.மீக்கு 2ம் கட்ட பணிகள் தொடங்க உள்ளது. அதன் படி, சிறுசேரி, புறநகர் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் எனரூ.79,961 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு மத்திய அரசிடம் ஒப்புதலும் பெறப்பட்டு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடனுதவி மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையிலான வழித்தடம் முதற்கட்டமாக கட்டப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. 
இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதற்கு ரூ.13,000 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழித்தடமானது வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள புறநகர் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐரோப்பிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட சர்வதேச வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages